ஜெர்மனி துப்பாக்கிச்சூட்டில் குழந்தையை பறிக்கொடுத்த கர்ப்பிணிப் பெண்!
ஜெர்மனியில் 10ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமுற்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிர்பிழைத்திருக்கிறார். ஆனால் அவருடைய குழந்தை கருவில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மனியின் ஹாம்பர்க் (Hamburg) நகரில் உள்ள கிறிஸ்துவ சமயத்தின் Jehovahs Witness வழிபாட்டு இடத்தில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டபோது அங்கு 50 பேர் இருந்தனர். துப்பாக்கிக்காரர் 100 முறைக்கு மேல் சுட்டதாகக் கூறப்படுகிறது.
காவல்துறை கட்டடத்துக்குள் சென்றபோது துப்பாக்கிக்காரர் தன்னையும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்ததாக நம்பப்படுகிறது. 35 வயது துப்பாக்கிக்காரர் முன்பு Jehovahs Witness வழிபாட்டைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சுமார் 18 மாதத்துக்கு முன்பு அந்தச் சமயக்குழுவுடன் கடுமையான முறையில் உறவை முறித்துக் கொண்டு அவர் வெளியேறினார் என்றும் அதிகாரிகள் கூறினர். தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அது பயங்கரவாதமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரி ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜேர்மன் ஊடகங்களால் அறிவிக்கப்பட்ட ஆறு அல்லது ஏழு இறப்புகளில் தாக்குதல் நடத்தியவர் உள்ளாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதுவரை, இதன் நோக்கம் குறித்து நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் இச் சம்பவ இடத்தில் இறந்த நபர் ஒருவரைக் கண்டுபிடித்ததாகவும், அவர் குற்றவாளியாக இருக்கலாம் என்று கருதுவதாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.