ரொறான்ரோவில் வார இறுதி நாட்களில் சீரற்ற காலநிலை
வார இறுதியில் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் (GTA) பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் பனி மழை காரணமாக சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என வானிலை நிபுணர் பில் கல்டர் (Bill Coulter) தெரிவித்தார்.
நாளைய தினம் 9°C வரை வெப்பநிலை உயர்ந்து ஓரளவு வெப்பநிலை காணப்படும் எனவும், ஆனால் வெள்ளிக்கிழமை பிற்பகலின்பின்னர் நிலைமை மோசமாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கி திங்கட்கிழமை மதியம் வரையில் பனிப்பொழிவு நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகமாக மாற்றமடைவதனால் மழையின் தன்மையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வாகன சாரதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் வார இறுதி முழுவதும் மிகவும் மோசமான போக்குவரத்து நிலைமைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.