அமெரிக்க நகருக்குள் ஹாயாக காரில் சவாரி சென்ற முரட்டுக் காளை!
அமெரிக்காவின் நோர்ஃபோக் (Norfolk) மாநிலத்தில் உள்ள நெப்பிராஸ்கா (Nebraska) நகரில் சென்றுகொண்டிருந்த காரின் இருக்கையில் பெரிய காளை ஒன்று சவாரி செய்த சம்பவம் வியக்க வைத்துள்ளது.
காரின் கூரை பாதியாக வெட்டப்பட்டிருந்ததால் காளை காருக்குள் நின்றபடி பயணம் செய்துள்ளது.
"மாட்டை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று நகருக்குள் வருகிறது" என்று தொலைபேசியில் புகார் கிடைத்தபோது காரில் கன்றுக்குட்டி இருக்கும் என்று நினைத்ததாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
எனினும் அங்கு சென்று பார்த்தப்போது காரில் காளை இருந்ததை பார்த்து அதிர்ர்சியடைந்த பொலிஸார் கார் ஓட்டுநருக்கு காளையை வீட்டுக்குக் கொண்டுசெல்லும்படி எச்சரிது அனுப்பியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் காளையொன்று நகரில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததாக கூறப்படுகின்றது.