லண்டனில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்; பொலிஸார் வெளியிட்ட தகவல்
லண்டன் தேம்ஸ் ஆற்றில் இலங்கையர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகிய நிலையில், உயிரிழந்தவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தேம்ஸ் ஆற்றில் நீரில் மூழ்கி காணாமல் போன ஒருவரை தேடும் பணியின் போது, சடலம் கரையொதுங்கியுள்ளதாக கடற் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டதன் காரணமாக அவர் மரணம் அடைந்திருக்கலாம் தெரிவிக்கப்படுகின்றது. அவர் நீருக்கடியில் சென்று மீண்டும் மேற்பரப்பிற்கு வரத் தவறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
தீயணைப்பு சேவை, ஆம்புலன்ஸ் குழுவினர், கடற்படை தேடல் மற்றும் மீட்பு பிரிவு உள்ளிட்ட அனைவரும் அந் நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பவத்தில் உயிரிழந்தவர் அகில கல்லகே என்ற இலங்கை இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக என பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் இலங்கை இளைஞரின் உறவினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஆழம் தெரியாத இடஙகளில் குளிப்பதற்கு அல்லது விளையாடுவதற்கு செல்வதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        