ஐக்கிய அரபு அமீரகம் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!
பொதுவெளியில் வேறொருவர் தவறவிட்ட பொருட்களை பயன்படுத்தினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசின் சட்ட துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், பொது வெளியில் தவறுதலாக விடப்பட்ட பொருட்களை கண்டெடுத்தால், அதனை இரண்டு நாட்களுக்குள் அதாவது 48 மணி நேரத்திற்குள் பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அத்தகைய பொருட்களை வைத்திருந்தால் சிறைத்தண்டனை மற்றும் 20,000 ஆயிரம் திர்ஹாமுக்கு (இலங்கை ரூபாTவில் சுமார் 20 லட்சம்) மேல் அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். 2021ஆம் ஆண்டின் அரசாணை சட்டம் 31 இன் பிரிவு 454 கீழ் படி தண்டனை விதிக்கப்படும்.
அதன்படி, வேறொருவர் தவற விட்ட பொருளை சொந்தச் சொத்தைப் போல் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் குற்ற வழக்கு தொடரும் என சட்டம் கூறுகிறது.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக வலைதளங்களிலும் பிரசாரமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின்படி, காணாமல் போன அல்லது கைவிடப்பட்ட சொத்தை யாரேனும் கண்டறிந்தால், 48 மணி நேரத்திற்குள் அந்த சொத்து அல்லது பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அத்தகைய செயலை மீறுவது குற்றவியல் நடவடிக்கைக்குட்பட்டது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.