Norwich இல் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு
பிரித்தானியாவின் (Norwich) நார்விச்நகருக்கு அருகில் உள்ள தோர்ப் செயின்ட் ஆண்ட்ரூ (Thorpe St Andrew) பெண் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கேத்தரின் கார்டன்ஸ் (Catherine Gardens) பகுதிக்கு விரைந்தனர். பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 60 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில், உயிரிழந்த பெண்ணும் கைது செய்யப்பட்ட நபரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.