லண்டன் ரயிலில் கைக்குழந்தையுடன் தவித்த ஆணுக்கு உதவிய பெண்ணிற்கு நேர்ந்த அதிர்ச்சி!
லண்டன் ரயிலில் கை குழந்தையுடன் தவித்தபடி இருக்கை கிடைக்காமல் அலைந்த ஆண் ஒருவருக்கு கைவிரல்கள் இல்லாத பெண் இருக்கை கொடுத்த நிலையில் இறுதியில் ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது.
லண்டன் சுரங்க ரயிலில் சமீபத்தில் ஏறிய Yudy besta என்ற ஆண் கையில் குழந்தையை வைத்துள்ளது போல போர்வையால் மார்பில் அணைத்தப்படி இருந்தார், அவரின் கையில் பால் பாட்டிலும் இருந்தது.
இதையடுத்து இரண்டு பக்கத்திலும் உள்ள இருக்கையில் பயணிகள் அமர்ந்திருந்த நடுவில் அங்குமிங்கும் இடம் கிடைக்காமல் Yudy அலைந்தார். அப்போது திடீரென இருக்கையில் இருந்த பெண் எழுந்து நின்று Yudy-ஐ அங்கு அமரும்படி கேட்டு கொண்டார்.
அந்த பெண்ணின் ஒரு கைகள் முழுவதிலும் விரல்கள் இல்லாமல் இருந்தது. பின்னர் அந்த இருக்கையில் அமர்ந்த Yudy தன் கையில் குழந்தை எதுவும் இல்லை என கூற அனைவரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.
Piccadilly அப்போது தான் அவர் social experiment பிராங்க் செய்தார் என தெரியவந்தது. பின்னர் தனக்கு இருக்கையை விட்டு கொடுத்த பெண்ணையே அங்கு உட்கார செய்த Yudy, நீங்கள் செய்தது சிறப்பான செயல் என பாராட்டினார்.
மேலும் பலர் கருத்து தெரிவிக்கையில், வேறு யாருமே இருக்கை கொடுக்க முன் வராத போது அப்பெண் மட்டுமே கொடுத்தார், அவருடைய ஒரு கையில் விரல்கள் இல்லை, ஆனால் மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவர் இருக்கையை கொடுத்தார், மிகவும் பெரிய மனது கொண்டவர் அவர் என தெரிவித்துள்ளனர்.