டொரன்டோவில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை
கனடாவில் டொரன்டோ நகரில் காலநிலை சீர்கேடு தொடர்பிலான பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. டொரன்டோ நகரில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் எனவும் வீதி பனிமூட்டத்துடன் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

டொரன்டோ மற்றும் டர்ஹம் பிராந்தியம் போன்றவற்றில் கடுமையான பனிப்பொழிவினை அவதானிக்க முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நேரங்களில் இவ்வாறு சாரதிகளுக்கு வீதி தெளிவாக தெரியாத நிலை காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் வாகனங்களை மெதுவாக செலுத்துமாறும் மின் விளக்குகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தேவை ஏற்பட்டால் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நான்கு பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நிலவும் எனவும் காற்றின் ஈரப்பதன் காரணமாக மறை எட்டு பாகை செல்சியஸாக அந்த வெப்பநிலை உணரப்படும் எனவும் கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிவு கூறியுள்ளது.