உலகில் முதல் முறை; தன் கருப்பையை தானமாக வழங்கிய சகோதரி; குழந்தை பெறவுள்ள பெண்!
பிரிட்டனில் முதல்முறையாக மருத்துவர்கள் ஒரு பெண்ணுக்குக் கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 9 மணி நேரம் நீடித்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் கருப்பையைப் பெற்ற பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.
பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவில்லை
இந்நிலையில் கருப்பையை தானமாக பெற்ற பெண் IVF எனப்படும் செயற்கைக் கருத்தரிப்பு முறையின் மூலம் இரு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடுவதாக அவர் கூறினார்.
பெண்ணின் கருப்பை தற்போது நன்கு செயல்படுவதாகவும் அவரின் உடல்நிலையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
திருமணமான அந்த 34 வயதுப் பெண் அரிய குறைபாடுடன் பிறந்தவர். அவரின் கருப்பை முழுமையாக வளர்ச்சி பெறவில்லை என்று The Guardian செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அந்தப் பெண்ணுக்குக் கருப்பையைத் தானம் செய்தார் அவரது 40 வயதுச் சகோதரி. கருப்பை தானம் செய்த சகோதரிக்கு ஏற்கனவே இரு பிள்ளைகள் உள்ள நிலையில், இந்நிலையில் அவரின் கருப்பையை அகற்ற சுமார் 8 மணி நேரமானதாக கூறப்படும் நிலையில், கருப்பையை நீக்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இளைய சகோதரியின் அறுவைச் சிகிச்சை தொடங்கியது.
இதற்காக 25,000 பவுண்ட் செலவு நன்கொடையாகப் பெறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.