விசித்திரமான எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்
சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாய் இயங்கி வந்த 20 வயது இளம்பெண்ணான எலினா ஹுல்வா ஒரு வகையான எலும்பு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இவர் அரியவகை எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஜனவரி மாத தொடக்கத்தில் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு அவருக்கு ’எவிங் சர்கோமா’ (Ewing sarcoma) என்ற அரிய வகை எலும்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்
இந்தப் புற்றுநோயானது, எலும்புகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் ஏற்படும் ஒரு அரிய வகை புற்றுநோயாகும்.இப் புற்றுநோய் அதைக் கண்டுபிடித்த மருத்துவர் ஜேம்ஸ் எவிங்கின் பெயரில் உருவானதாகச் சொல்லப்படுகிறது.
இவ்வகை புற்றுநோய், தொடை எலும்பு, மேல் கை எலும்பு ஆகியவற்றில் இருந்து தொடங்குவதாகவும், இது பெரும்பாலும் கால் எலும்புகள் மற்றும் இடுப்பை ஒட்டிய பகுதிகளில் காணப்படும் எனவும் கூறப்படுகிறது.
அறிகுறிகள்
இந்த நோய் அசாதாரணமானது என்றாலும் மார்பு, வயிறு மற்றும் கைகால்களின் மென்மையான திசு பகுதிகளிலும் பரவும் வாய்ப்புண்டு.எலும்பில் வலி, அதிக சோர்வு, காய்ச்சல் மற்றும் எதிர்பாராத எடை இழப்பு ஆகியன இப்புற்றுநோயின் அறிகுறிகளாகச் சொல்லப்படுகிறது.
தன்னுடைய புற்றுநோயை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்து வந்துள்ளதோடு பல மாதங்களாக அதிலிருந்து தாம் மீண்டு வருவது பற்றிய உருக்கமான பதிவுகளையும் பதிவிட்டு வந்துள்ளார்.
அவர் தன்னுடைய கடைசிப் பதிவில், "விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. மருத்துவர்கள், எனது சுவாசத்தில் அதிகமான நோய்களைக் கண்டறிந்தனர். இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் உங்களுக்குத் தெரியும் அங்குதான் நாம் சுவாசிக்கிறோம்” என அவர் பதிவிட்டிருந்த கடைசிப் பதிவைக் கண்டு பலரும் அதற்கு கண்ணீருடன் பதிலளித்து வந்துள்ளனர்.