இங்கிலாந்தில் பாடசாலை ஆசியர் காயம்; 15 வயது மாணவன் கைது
இங்கிலாந்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் காயமடைந்த சம்பவத்தில், 15 வயது சிறுவன் ஒருவன் கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை (5) பிற்பகல் சுமார் 3:20 மணியளவில், பெம்ப்ரோக்ஷையரில் (Pembrokeshire) உள்ள மில்ஃபோர்ட் ஹேவன் பாடசாலையில் இருந்து (Milford Haven School) ஆயுதம் ஏந்திய மாணவர் ஒருவர் ஆசிரியரைத் தாக்கியதாக வந்த தகவலையடுத்து டைஃபெட்-போவிஸ் (Dyfed-Powys) காவல்துறையினர் பாடசாலைக்கு சென்றதாக தெரிவித்தனர்.

இதன்போது ஆசிரியர் கத்தியால் தாக்கப்படவில்லையெனவும் மாணவனை கட்டுப்படுத்த முட்பட்டபோது அவர் தாக்குதலுக்குள்ளானதாகவும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவத்தை அடுத்து பாடசாலை நேற்று (6) மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், கூடுதல் விழிப்புணர்வுக்காகவும் அடுத்த சில நாட்களில் அந்தப் பகுதியில் அதிகப்படியான காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.