அபுதாபி டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த சவுதி கூட்டுப்படைகள்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி விமான நிலையத்தில் நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர்.
இதில், எண்ணெய் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டேங்குகள் வெடித்து சிதறியது.
குறித்த தாக்குதலில் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 2 இந்தியர்கள், 1 பாகிஸ்தானி என 3 பேர் உயிரிழந்தாக தகவல் கிடைத்தது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.
அபுதாபியில் தாக்குதல் நடத்து சில மணி நேரங்களில் இந்த பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப்படைகளுக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.