சீனாவில் இரு தொடருந்துகள் மோதி விபத்து : 500 பேர் படுகாயம்
சீனாவில் இன்று (2023.12.16) இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 500 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் தொடருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தொடருந்து மற்றுமொரு தொடருந்துடன் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் இரு தொடருந்துகளிலும் பயணித்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
குறித்த விபத்து குறித்து அந்நாட்டு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.