உக்ரைன் ஜனாதிபதியின் அதிரடி முடிவு!
உக்ரைனின் பாதுகாப்புப் பிரிவின் தலைவரையும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெனரலையும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) பதவி நீக்கம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தேசத்துரோகம் மற்றும் எதிர்தரப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை காரணமாக இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனின் பாதுகாப்பு சேவையின் (SBU) தலைவரான இவான் பகானோவ்(Ivan Baganov), ஜெலென்ஸ்கியின் நீண்டகால நண்பர் என்று கூறப்படுகிறது.
அவர் வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனெடிக்டோவாவை(Irina Venediktova) பதவி நீக்கம் செய்து அவருக்கு பதிலாக அவரது துணை ஓலெக்ஸி சிமோனென்கோவை(Oleksii Simonenko) நியமித்தார்.

இது குறித்து ஜனாதிபதி, தனது இரவு உரையில் பேசுகையில், வழக்கறிஞரின் அலுவலகம் மற்றும்உக்ரைனின் பாதுகாப்பு சேவை ஆகியவற்றின் 60 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் தங்கியிருந்து எங்கள் அரசுக்கு எதிராக வேலை செய்கிறார்கள் என்று கூறினார்.
அரசின் தேசிய பாதுகாப்பின் அடித்தளத்திற்கு எதிரான இத்தகைய குற்றங்களின் வரிசை மற்றும் உக்ரேனிய பாதுகாப்புப் படைகளுக்கும் ரஷ்ய சிறப்புப் படைகளுக்கும் இடையே பதிவுசெய்யப்பட்ட தொடர்புகள் அந்தந்த தலைவர்களைப் பற்றி மிகவும் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன, என்று அவர் மேலும் கூறினார்.
சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக 651 தேசத்துரோகம் மற்றும் ஒத்துழைப்பு வழக்குகளும் தொடங்கப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி  கூறினார்.
இதனிடையே, ஏறக்குறைய ஐந்து மாத போர் காலப்பகுதியில், ரஷ்யா 3,000 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது ஆனால் பீரங்கித் தாக்குதல்களின் எண்ணிக்கையை எண்ணுவது சாத்தியமில்லை என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        