பதவியேற்றதும் அதிரடி காட்டும் பிரித்தானிய புதிய பிரதமர் லிஸ்
பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் (Liz Truss) 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், (Boris Johnson) பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தன் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.
அதன்பின்னர் லிஸ் டிரஸ், பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தை (Queen Elizabeth II) சந்தித்தார். அப்போது, ராணி எலிசபெத் லிஸ் டிரஸை பிரதமராக நியமனம் செய்தார்.
பின்னர் லண்டன் திரும்பியபிறகு 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸ், நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையை நிகழ்த்தினார்.
அப்போது, தனது கவனம் முழுவதையும் முக்கியமான 3 விஷயங்களில் செலுத்தவிருப்பதாக கூறினார்.
அதாவது தேசிய சுகதார சேவையை மேம்படுத்துவது, மக்களின் மீது உள்ள வரி சுமையை குறைப்பது மற்றும் ரஷ்யா இடையிலான போரினால் எழுந்திருக்கும் எரிசக்தி பிரச்சனையை சமாளிப்பது ஆகியவற்றில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தவிரப்பதாக குறிப்பிட்டார்.