நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி மரணம்!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் மீனா.
திரையுலகில் நடித்து வரும் போதே நடிகை மீனா கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
மீனாவுக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் தனது கணருவருன் பெங்களூரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் ஆகியோரை கொரோனா பாதித்தது. இதில் இருந்து இருவரும் மீண்டனர். இருப்பினும் கொரோனாவால் இருந்து மீண்டாலும் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நுரையீரல் பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில நாட்களாக எம்ஜிஎம் வைத்தியசாலையில் வித்யாசாகர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் அவர் காலமானார்.