உலக பணக்காரர்கள் தரவரிசை பட்டியலில் அதானிக்கு நேர்ந்த நிலை!
உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தக்வல் வெளியிட்டுள்ளது.
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு முறைப்பாட்டை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வந்ததால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.
கவுதம் அதானி 57 பில்லியன் டொலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் 1 இடத்திலும், எலான் மஸ்க் 2வது இடத்திலும், முகேஷ் அம்பானி 12-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இருந்த அதானியை இந்தியாவின் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.