ஜோபைடன் மகனிடம் ஒரு மில்லியன் டொலர் நஷ்டஈடு கேட்கும் மெலனியா டிரம்ப்
ஜோபைடன் மகனிடம் ஒரு மில்லியன் டொலரை டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப் நஷ்டஈடு கேட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோது சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
மன்னிப்பு கேட்டு நஷ்டஈடு
இதற்கிடையே அவர் மீதான விசாரணை ஆவணங்களில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட பிரபலங்கள் பெயர்கள் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் டிரம்புக்கு அவரது மனைவி மெலனியாவை எப்ஸ்டீன்தான் அறிமுகப்படுத்தினார் என்றும் அப்படித்தான் டிரம்பும், மெலனியாவும் சந்தித்தனர் என்று முன்னாள் ஜனாதிபதி ஜோபைடனின் மகன் ஹண்டர் பைடன் தெரிவித்தார்.
இதற்கு மெலனியா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஹண்டர் பைடன் தெரிவித்த தகவல் தவறானது என்று தெரிவித்தார். அதோடு அவதூறு பரப்பியதாக கூறி ஹண்டர் பைடனுக்கு சட்டப்பூர்வ நோட்டீசை மெலனியா அனுப்பி உள்ளார்.
அதில் மெலனியா மற்றும் ஜெப்ரி எப்ஸ்டீன் இடையேயான தொடர்பைக் குறிக்கும் உங்கள் கருத்துக்கள் தவறானவை, அவதூறானவை. எனது நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது.
எனவே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கைகளை திரும்பப் பெறத் தவறினால் உங்கள் மீது 1 பில்லியன் டாலர் அவதூறு வழக்குத் தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.