ஆப்கானிஸ்தானில் பிரபல நகைச்சுவை நடிகர் கொடூரமாக சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் பிரபல நகைச்சுவை நடிகர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
கந்தகார் பகுதியைச் சேர்ந்த நகைச்சுவை நடிகரான நசார் முகமத்-ஐ, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் வீட்டுக்குள் வந்து கடத்திச் சென்று கொன்றதாக கூறப்படுகிறது.
தலிபான்கள்தான் நசார் முகமத்-ஐ கடத்தி, கொலை செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறிய குற்றச்சாட்டை தாலிபான் அமைப்பு மறுத்துள்ளது.
நசார் முகமது நகைச்சுவை நடிகராவதற்கு முன் ஆப்கான் காவல்துறையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நசார் கொல்லப்படுவதற்கு முன், காரில் வைத்து சிலர் அவரை அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.