அமெரிக்க - ஈரான் தற்காலிக அமைதி உடன்படிக்கை "பயனுள்ளது" -கனடியப் பிரதமர்

Canada
By Kamal Jun 17, 2026 10:44 AM GMT
Report

 அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தற்காலிக உடன்படிக்கையொன்று எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உடன்படிக்கை "பயனுள்ளது" என கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

பிரான்சின் ஏவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சிமாநாட்டின் போது, சர்வதேச ஊடகமொன்றிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் பார்வையில் இப்போரினால் பலன் கிடைத்துள்ளதா என நேரடியாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஈரான் அணு ஆயுதத்தை பெற்றுக்கொள்வதை தடுத்து நிறுத்தியதன் மூலம் இந்த மோதல் பயனுள்ளதாக மாறியுள்ளது என நியாயப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க - ஈரான் தற்காலிக அமைதி உடன்படிக்கை "பயனுள்ளது" -கனடியப் பிரதமர் | Pm Carney Calls War In Iran Worth It

ஈரான் உலகிலேயே பயங்கரவாதத்தை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு என தான் எப்போதும் நம்புவதாகக் குறிப்பிட்ட பிரதமர் கார்னி, அணு ஆயுதத்தை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அந்த நாடு தீவிரமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையின் மூலம் ஈரானின் அணு ஆயுதக் கனவு முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல விடயங்கள் சாத்தியமாக வேண்டியுள்ள போதிலும், இந்த உடன்படிக்கையை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த தற்காலிக உடன்படிக்கை அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் இருதரப்பு போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதிக்குள் இறுதி உடன்படிக்கையின் விபரங்கள் குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்த உடன்படிக்கையை "சுமார் ஒன்றரை பக்கங்களைக் கொண்டது" என விவரித்துள்ள போதிலும், அதன் முழு விபரங்கள் இன்னும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US