ஆப்கானில் தொடரும் தாலிபான்களின் அட்டூழியம்...பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக்கொலை
ஆப்கானில் .பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கோர்மாகாணத்தின் தலைநகரமான பிரோஸ்கோவில் பனுநெகர் என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சனிக்கிழமை பனுநெகர் வீட்டிற்கு சென்ற தாலிபான்கள் வீட்டில் உள்ளவர்களை கட்டிவைத்த பின்னர் அவரின் உறவினர்கள் முன்னிலையில் அவரை சுட்டுக்கொன்றதாக இடம்பெற்ற சம்பவத்தை கண்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட நெகர் என்பதும் அவர் எட்டுமாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அச்சம் காரணமாக பொதுமக்கள் தகவல்களை வெளியிட தயங்குகின்றனர் எனினும் கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சுவரில் இரத்தம் காணப்படும் படத்தையும் அறையின் மூலையில் சிதைவடைந்த சடலத்தின் புகைப்படங்களும் கிடைத்துள்ளன.