ஆப்கானில் இசைக்கருவியை தீவைத்து எரிக்கும் தலிபான்கள்: அதிர்ச்சி காணொளி
ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு சமூக, கலாச்சார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆப்கானில் வாகனங்களில் செல்வோர் இசை கேட்கவும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசை வாத்தியங்களை ஒலிக்கவும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது உள்ளூர் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு எரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
Video : Taliban burn musician's musical instrument as local musicians weeps. This incident happened in #ZazaiArub District #Paktia Province #Afghanistan . pic.twitter.com/zzCp0POeKl
— Abdulhaq Omeri (@AbdulhaqOmeri) January 15, 2022
ஆப்கானிஸ்தான் பாக்தியா மாகாணத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இசையமையாளர் ஒருவரிடம் இருந்து இசைக்கருவி பிடுங்கப்பட்டு, நடுரோட்டில் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதை கண்டு அந்த இசையமைப்பாளர் அழுகிறார்.
ஆனால் தலிபான்கள் அவரின் அவல நிலையை கண்டு சிரிக்கின்றனர். இந்த வீடியோவை ஆப்கானிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.