30 ஆண்டுக்கு பின் மிக வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
கடல் அடிவாரத்தில் சிக்கியிருந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறை 30 வருடங்களுக்கு பின்னர் தற்போது வேகமாக நகர ஆரம்பித்துள்ளது.
கடந்த 1986 ஆம் ஆண்டு அண்டார்ட்டிக்கா பகுதியிலிருந்து ஏ23 எனும் பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலுக்குள் நுழைந்தது தற்போது, உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான இது வெட்டெல் கடல் பகுதியில் ஒரு பனித் தீவாக மாறியது.
4,000 சதுர கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பாறை சில காலமாகவே ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்தது.
சுமார் ஒரு ட்ரில்லியன் டன்கள் எடை கொண்ட இப்பனிப்பாறை, வேகமாக பயணிப்பது போல தெரிகிறதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்துள்ளார்.
இந்த பனிப்பாறை 400மீ (1,312 அடி) தடிமன் கொண்டது. 310 மீ உயரம் கொண்ட லண்டன் ஷார்ட், ஐரோப்பாவின் மிக உயரமான கட்டிடங்களின் உயரத்தை விட உயரம் கூடுதலாக உள்ளது.
இது ஒரு பிரமாண்மான பனிப்பாறை என தெரிவிக்கப்படுகிறது.
பனிப்பாறை கடந்த ஆண்டு வேகமாக நகர தொடங்கியது. அண்டார்ட்டிக்கா கடற்பகுதிக்கு அப்பால் கசியவுள்ளது.
பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் என்றழைக்கப்படும் வெள்ளைக் கண்டம் இக்கண்டத்தின் பனி அடுக்கில் இருந்து பெருமளவில் வெடித்த பெரும் பாறைகளின் ஒரு பகுதியாகும்.