மீண்டும் ஐநா பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடும் அன்டோனியோ?
ஐநா அமைப்பின் பொதுச்செயலாளர் பதவிக்கு அன்டோனிய குட்டெரெஸ் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு நான்கு வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி ஐநா பொதுச்செயலாளராக குட்டெரெஸ் பதவியேற்றார்.
இவருடைய பதவிக்காலம் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் ஐநா அமைப்பின் பொதுச்செயலாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிட அன்டோனியோ குட்டெரெஸ் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து குட்டெரெஸ் செய்தி தொடர்பாளர் ஸ்டெப்போனி துஜாரிக் கூறுகையில்,
ஐநா பொதுச்சபை தலைவர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு கடிதம் மூலம் அன்டொனியோ குட்டெரெஸ் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறினார்.