கனடிய பிரதமர் ஐரோப்பாவிற்கான விஜயத்தை நிறைவு செய்தார்
கனடிய பிரதமர் மார்க் கார்னி ஐரோப்பிய நாடுகளுக்கான தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
இறுதியாக லாட்வியாவிற்கு விஜயம் செய்து அங்கு நிலை கொண்டுள்ள கனடிய படையினரை பிரதமர் சந்தித்துள்ளார்.
கனடிய பிரதமரின் ஐரோப்பிய விஜயமானது பாதுகாப்பு விவகாரங்களை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

லாட்வியாவின் ஆதாசி இராணுவ தளத்தில் நிலை கொண்டுள்ள படையினரிடம் கார்னி பேசியுள்ளார்.
ஐரோப்பாவின் கிழக்கு எல்லையில் ரஷ்ய ஆக்கிரமிப்பை தடுக்கும் நோக்கில், பலநாட்டு படைகள் லாட்வியாவில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, உக்ரைக்கு இரண்டு பில்லியன் டொலர் இராணுவ உதவிகளை வழங்குவதாக அண்மையில் கனடா அறிவித்திருந்தது,
மேலும் இந்த உதவியில் ட்ரோன்களுக்காக 220 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        