எரிபொருள் மானியம் குறித்து விவசாய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருள் மானியம் கிடைக்காத பகுதிகள் தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் எரிபொருள் மானியத்தை வழங்குமாறு அரசாங்கம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் போகத்திற்கு தேவையான மண் உரத்தை விவசாயிகளுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த அமரவீர அங்கு தெரிவித்தார்.
இதேவேளை, நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததால் தாம் விளைவித்த பயிர்களை விற்பனை செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக நெல் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும், அரசின் நெல் கொள்வனவு வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக உள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.யு.கே.சேமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.