23 ஆயிரம் டாலர் கடனை அடைக்க உதவிய AI; அமெரிக்காவில் ஆச்சர்ய சம்பவம்!
அமெரிக்காவை சேர்ந்த ஆலன் என்ற பெண். நிரல் எழுத்தராக பணிபுரியும் ஆலனுக்கு 23 ஆயிரம் டாலர்கள் வரை கடன் இருந்துள்ளது.
அவருக்கு நிதியை கையாள தெரியாததால் கன்னாபின்னாவென்று செலவுகளையும் செய்து வந்துள்ளார். எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற நிலை ஏற்பட்டபோது அதை சாட்ஜிபிடி ஏஐயிடம் சொல்லி புலம்பியிருக்கிறார்.
சாட்ஜிபிடியின் அறிவுரை
அப்போது ஆலனின் மாத சம்பளத்தை சரியாக கையாள்வதன் மூலம் இந்த கடன்களை அடைப்பதோடு கூடுதல் வருமானத்தையும் பெற முடியும் என சாட்ஜிபிடி கூறியுள்ளது. தொடர்ந்து 30 நாட்களுக்கு ஆலனுடன் பேசி பல நிதி மேலாண்மை ஆலோசனைகளை சாட்ஜிபிடி வழங்கியுள்ளது.
தேவையற்ற ஓடிடி சந்தாக்களை நிறுத்துதல், சமூக வலைதளங்களில் பொருட்களை விற்று கூடுதல் வருமானம் பெறுதல், தினசரி உணவுப்பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்துதல் என சாட்ஜிபிடியின் பல அறிவுரைகளை பின்பற்றினார் ஆலன்.
அதன் பலனாக ஒரு மாத இறுதியில் தனது கடனில் 10 ஆயிரம் டாலர்கள் கடனை அடைத்ததோடு, மாதம் 600 டாலர்கள் சில்லறை வேலைகள் மூலமாக ஈட்டியுள்ளார்.
இந்நிலையில் ஒரு பொருளாதார நிபுணராக சாட்ஜிபிடி தனக்கு உதவியது குறித்து அவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகியுள்ளது.