கனடாவில் போதைப் பொருள் கடத்திய நபருக்கு 11 ஆண்டுகள் சிறை
பென்டனில் மற்றும் கொக்கைன் போதைப்பொருட்களுடன் டெஸ்லா வாகனத்தில் பயணித்த பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேசன் தோமஸ் ஹோவர்ட் கான்ராட் என்பவருக்கு இவ்வாறு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், போதைப்பொருள் விற்பனை நோக்குடன் வைத்திருந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து, அவருக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் தீர்மானித்தது.
நீதிபதி ஆன்ட்ரூ மஜாவா இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளார்.
2023 ஜனவரியில் ரிச்ச்மண்ட் நகரம் உள்ள மக்லியோட் கோர்ட் வீடொன்றில், பென்டனில் தயாரிக்கப்படுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பகுதியில் காவல்துறை கண்காணிப்பு மேற்கொண்டது.
பின்னர், வீடு சோதனை செய்யப்பட்டபோது, அங்கு பென்டனில் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
2023 பெப்ரவரியில், கான்ராட் அந்த வீட்டிற்குள் காலியாய் சென்றதும், பின்னர் அடர்த்தியான பையுடன் வெளியே வந்ததும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.