உணவுக்காக ஓடி உயிரிழந்த காசா மக்கள்; பெரும் துயர நிலை!
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் நீடித்து வரும் நிலையில், காசாமீது அமெரிக்கா, வான்வெளிஊடாக வீசப்பட்ட உதவிப்பொருட்கள் கடலில் விழுந்தவேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் ஆறுமாத இராணுவநடவடிக்கை காரணமாக காசவில் பெரும் பட்டினிநிலை உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாரசூட் இயங்காததால் கடலிற்குள் விழுந்த உதவிப்பொருட்கள்
வடகாசாவில் உள்ள பென்லகியா கடற்கரையோரத்தை நோக்கி பொதுமக்கள் ஒடுவதையும் அதன் பின்னர் ஆழமான நீரில் பொதுமக்கள் காணப்படுவதையும் பின்னர் அவர்களின் உடல்கள் மீட்கப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அவர் தனது பிள்ளைகளிற்கு உணவை பெற்றுக்கொள்வதற்காக கடலுக்குள் நீந்தி சென்றார் அவர் தியாகியாக மாறிவிட்டார் என கடற்கரையில் காணப்படும் ஒருவர் தெரிவிப்பதை வீடியோ காண்பித்துள்ளது.
அவர்கள் தரைவழி ஊடாக மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும் ஏன் இப்படி செய்கின்றார்கள் எனவும் அவர் கேள்விஎழுப்பியுள்ளார். 18பொதிகளில் மனிதாபிமான உதவிகளை பரசூட் மூலம் வீசியதாக தெரிவித்துள்ள பென்டகன், பாரசூட் இயங்காததால் அவை கடலிற்குள் விழுந்ததாக தெரிவித்துள்ளது.
காசாவில் சிலர் களைகளை உண்பதற்கும் விலங்குகளின் உணவிலிருந்து தயாரிக்கப்படும் ரொட்டியை உண்பதற்குமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பரிதாபமான நிலையில், உணவுபொருகளுக்கு மக்கள் ஏங்கிவரும், நிலையில், உதவிப் பொருட்களை பெற முயலும்போது உயிரிழப்புகள் ஏற்படுவது மிகப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.