ட்விட்டர் பதிவினால் தொழிலை இழந்த கனடிய விமானி

Kamal
Report this article
எயார் கனடா விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றிய விமானி ஒருவர் ட்விட்டர் பதிவு ஒன்றை இட்டதனால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வார இறுதியில் குறித்த விமானி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் ட்விட்டர் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
இஸ்ரேல் தொடர்பில் ஏற்றுக்கொள்ள முடியாத பதிவுகளை குறித்த விமானி இட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விமானிகள் அணியும் அதிகாரப்பூர்வ சீருடை அணிந்து கொண்டு இஸ்ரேலை இழிவுபடுத்தும் வகையில் குறித்த நபர் ட்விட்டரில் பதிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவில் இஸ்ரேலிய மக்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தையும் இந்த விமானி ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த விமானி உடன் அமலுக்கு வரும் வகையில் பணி நீக்கப்பட்டுள்ளதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.