இந்தோனேசியா - ரஷ்யா இடையே மீண்டும் விமான சேவை
இந்தோனேசியா ரஷ்யா நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என்று இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா யூனோ தெரிவித்தார்.
இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தோனேசியாவின் சுற்றுலா வருமானத்தில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால், இந்தோனேஷியா அதை மீண்டும் பாதைக்கு கொண்டு வர முயற்சிக்கிறது.
ஆனால் நேரடி விமானங்களை இயக்க ரஷ்யா சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என்று இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா யூனோ தெரிவித்தார்.