கனடாவில் சிறிய ரக தனிநபர் விமானம் விபத்து
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள 'கிளியர்வியூ' பகுதியில் சனிக்கிழமை சிறிய ரக தனிநபர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதன் விமானி லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
கிளியர்வியூ நகரியத்தில் உள்ள கிரீமோர் பகுதிக்கு அருகில் 'கவுண்டி வீதி 9' பாதைக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இரண்டு இருக்கைகளைக் கொண்ட இந்த சிறிய ரக விமானத்தில் விபத்து நடந்த போது விமானி மட்டுமே பயணித்துள்ளார்.

விபத்து நிகழ்ந்த உடனே அவர் தானாகவே விமானத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
விபத்தில் லேசான காயங்களுக்குள்ளான விமானி, உடனடியாக 'கொலிங்வுட் ஜெனரல் அண்ட் மரைன்' மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கிளியர்வியூ தீயணைப்புப் படையினர், அவசர மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஒன்ராறியோ மாநிலப் பொலிஸார் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.