விமானத்தின் அவசர வெளியேற்ற கதவினை திறந்து இறக்கை வழியாக நடந்த நபர்
அமெரிக்காவில் விமானமொன்றின் அவசர வெளியேற்ற கதவினை திறந்து விமான இறக்கையில் நபர் ஒருவர் நடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுனைட்ட் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று சிக்காவோ விமான நிலைலயத்தில் தரையிறக்கப்பட்டுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானம் முழு அளவில் தரையிறக்கப்படாது ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்த வேளையில் குறித்த நபர் அவசர வெளியேற்ற கதவினைத் திறந்து, விமான இறக்கையில் நடந்து சென்றுள்ளார்.
பின்னர் இறக்கை வழியாக தரையிறங்கியுள்ளதாக சிக்காகோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சான் டியாகோவிலிருந்து பயணம் செய்த விமானமொன்றில் பயணம் செய்தவரே இவ்வாறு குழப்பம் விளைவித்துள்ளார்.
குழப்பம் விளைவித்த நபரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏனைய அனைத்து பயணிகளும் பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுகின்றது.