எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான யுக்ரைனின் தாக்குதல் ; மசகு எண்ணெய் உற்பத்தியில் பாதிப்பு
ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது யுக்ரைன், ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது.
தன் காரணமாக, அந்த சுத்திகரிப்பு நிலையம் பற்றி எரிந்ததால், மசகு எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் வடமேற்கு பகுதியிலுள்ள லெனின்கிராட் பகுதியில், கிரிஷி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 177 கோடி மெட்ரிக் டன் மசகு எண்ணெய் ஆண்டுதோறும் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
இது முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாக உள்ள நிலையில், குறித்த நிலையத்தின் மீது யுக்ரைன் ஆளில்லாத விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை யுக்ரைன் இராணுவ அதிகாரி உறுதி செய்துள்ளார்.
யுக்ரைன் அனுப்பிய 3 ஆளில்லாத விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் உதிரிப் பாகம்தான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது விழுந்ததாகவும் குறித்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும், இது குறித்து ரஷ்ய அதிகாரிகள் எதுவும் கூறவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யா ஆக்கிரமிப்பு கிரிமீயா பகுதியில் 80 ஆளில்லா விமானங்களை யுக்ரைன் அனுப்பியுள்ள நிலையில், அவை அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்ய அதிகாரி தெரிவித்துள்ளார்.