கனடாவில் தமிழர் ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள மோசமான குற்றச்சாட்டு
கனடாவில் தமிழர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
14 வயது சிறுமியை பல நாட்கள் கட்டாயமாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
30 வயது Ajax பகுதியைச் சேர்ந்த நபர் மீது போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
டர்ஹாம் பிராந்திய போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த வழக்கு குறித்து விசாரணை புதன்கிழமை ஹாமில்டன் போலீசார் வழங்கிய தகவலின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 வயது சிறுமி ஹாமில்டனில் இருந்து சந்தேகநபரால் கார் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, Ajax பகுதியில் பல நாட்கள் கட்டாயமாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்த தகவலின் அடிப்படையில், கௌரிசங்கர் கதிர்காமநாதன் என்ற பெயர் கொண்ட 30 வயது நபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ள இவர் மீதான விசாரணை தொடர்கிறது என்றும், மேலும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.