அல்பேர்ட்டா காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவ உதவி கோரப்பட்டுள்ளது
கனடாவின் அல்பேர்ட்டாவின் மாகாணத்தில் நிலவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.
காட்டுத்தீ மோசமான நிலையை அடைந்துள்ளதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆல்பர்ட்டாவின் 176 இடங்களில் காட்டுத்தீ பரவுகை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணம் முழுவதிலும் காட்டு தீயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அல்பர்ட்டா மாகாண பொது பாதுகாப்பு அமைச்சர் மைக் டெலிஸ் தெரிவித்துள்ளார்.
காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு உதவிகளை வழங்குமாறு மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கனடிய ராணுவ படையினரை உதவிக்கு அனுப்புமாறும் ராணுவ வளங்களை தந்து உதவுமாறும் கோரியதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு அல்பர்ட்டா பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, கட்டுக்கு அடங்காத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.