கனடாவின் இந்த மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்குமாறு கோரிக்கை
கனடாவின் அல்பேர்டா மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பேர்டா மாகாண மருத்துவமனைகளில் நிலவும் நிலைமை மிகவும் மோசமானதாக மாறியுள்ள நிலையில், உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சில மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பிரிவுகளின் கோரிக்கையின் பேரில், அல்பேர்டா அரசு அவசர நிலை (State of Emergency) அறிவிக்க வேண்டும் என அல்பேர்டா மருத்துவ சங்கத்தின் அவசர மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர் பால் பார்க்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
நிலைமை இப்போது முற்றிலும் நெருக்கடி நிலைக்கு சென்றுள்ளது. காத்திருப்பு அறைகளிலேயே நோயாளிகள் உயிரிழக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற சூழல் காரணமாக பலருக்கு கடுமையான விளைவுகள் ஏற்படுகின்றன,” என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான உதாரணமாக, இந்த வாரம் எட்மன்டனில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை அவர் குறிப்பிட்டார்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதற்காக காத்திருந்த இரண்டு நோயாளிகள், ஒருவர் சுமார் 72 மணி நேரமும் மற்றொருவர் 48 மணி நேரமும் காத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.
“இது ஒரு நெருக்கடி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இந்த நிலையை சமாளிக்க யார் பொறுப்பேற்கப் போகிறார்கள், மாகாண அளவிலான பேரிடர் மேலாண்மை அணியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பான மற்றும் காலத்துக்குள் வழங்கப்படும் அவசர சிகிச்சையை மீட்டெடுக்க முடியும்,” என டாக்டர் பார்க்ஸ் தெரிவித்துள்ளார்.