279 ஏக்கர் காணியை தானமாக வழங்கிய அல்பர்ட்டா குடும்பம்;என்ன காரணம் தெரியுமா?
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று சுமார் 279 ஏக்கர் காணியை தானமாக வழங்கியுள்ளது.
இயற்கை மிகவும் நேசித்த தமது சகோதரரின் நினைவாக இவ்வாறு காணி தானமாக வழங்கப்பட்டுள்ளது.
அல்பர்ட்டாவின் வடக்கு எட்மோன்டன் பகுதியில் அமைந்துள்ள 279 ஏக்கர் காணி, கனேடிய இயற்கை பாதுகாப்பு வாரியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த காணிப் பரப்பில் காணப்படும் இயற்கை சூழல் மாற்றமடைந்து விடக் கூடாது என போல் பேரன்ட் என்ற நபர் விரும்பியதாக அவரது சகோதரர் நோர்ம் போரன்ட் தெரிவிக்கின்றார்.
1906ம் ஆண்டு முதல் இந்த காணியை குறித்த குடும்பத்தைச் சேர்ந்தவாகள் தலைமுறை தலைமுறையாக பராமரித்து வருகின்றனர்.
தனது சகோதர்ர் மிகவும் இரக்க குணமுடையவர் எனவும் இயற்கையை மிகவும் நேசித்தார் எனவும் நோர்ம் தெரிவிக்கின்றார்.
எனவே சகோதரரை கௌரவப்படுத்தும் நோக்கில் இந்தக் காணியை இயற்கை சமனிலையில் மாற்றமின்றி பாதுகாக்காப்பட்ட வலயமாக பேணுவதற்கு தாம் தீர்மானித்த்தாக நோர்ம் தெரிவிக்கின்றார்.
பேரன்ட் சகோதரர்கள் நீண்ட காலமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.