அல்பெர்டாவில் தொடரும் ஆசிரியர் வேலைநிறுத்தம்
கனடாவின் அல்பெர்டா மாகாண ஆசிரியர்கள் மாகாணமெங்கும் நடத்தும் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், இது மாகாணத்தின் தொழிற்சங்க போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகப் பதிவாகி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
51,000 உறுப்பினர்களைக் கொண்ட அல்பெர்டா ஆசிரியர் சங்கம் (Alberta Teachers’ Association) முன்னெடுத்து வரும் இந்த வேலைநிறுத்தம், இதுவரை மாகாணத்தில் இடம்பெற்ற மிகப் பெரிய தொழிலாளர் போராட்டமாகும் என அத்தபாஸ்கா பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் உறவுகள் பேராசிரியர் ஜேசன் ஃபாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக 2002 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, அதில் கலந்து கொண்டவர்கள் 21,000 பேர் மட்டுமே என அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய வேலைநிறுத்தம் பாடசாலைகளில் கற்கும் சுமார் 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களை பாதித்துள்ளது.
இந்தப் போராட்டம் சம்பள உயர்வு மற்றும் பணியிட நிபந்தனைகள் குறித்த கருத்து வேறுபாடுகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.