தகுதியற்றவர் ...மகனின் பதவியேற்பை விரும்பாத அலி கமேனி; அமெரிக்காவின் புதிய உளவுத் தகவல்கள்
போரில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது மகன் தனக்குப் பதிலாகப் பதவியேற்பது குறித்துத் தயக்கங்களைக் கொண்டிருந்ததாக அமெரிக்காவின் புதிய உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் சிபிஎஸ் நியூஸ் பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி இத்தகவலை தெரிவித்துள்ளது. தனது மகன் மொஜ்தபா கமேனி அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து கமேனி கவலை கொண்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

மொஜ்தபா அதிக புத்திசாலி இல்லை என்றும், தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும் அவர் கருதப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
மறைந்த அதி உயர் தலைவர் தனது மகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் இருப்பதை அறிந்திருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவல்கள் ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரைச் சார்ந்த ஒரு சிறிய வட்டத்திற்கு பகிரப்பட்டுள்ளதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது. அதேவேளை 56 வயதான அயதுல்லா மொஜ்தபா கமேனி, கடந்த வார இறுதியில் ஈரானின் புதிய அதி உயர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.