கனடாவில் விமான விபத்தில் சிக்கி தெய்வாதீனமாக உயிர் பிழைத்தவர்கள்!
கனடாவின் மொன்றியலின் லவுரான்டியன்ஸ் என்னும் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில், பயணம் செய்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
கியூபெக் பொலிஸார் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து கியூபெக் வாகன பொலிஸார் குறித்த பகுதியில் தேடுதல் நடத்தியுள்ளனர்.

மொன்றியாலின் வடமேற்கு பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது விமானத்தில் பயணித்த நான்கு பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டு மணித்தியால இடைவெளியில் விமானத்தில் பயணித்தவர்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நான்கு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் தீயணைப்பு படையின் ஒத்துழைப்புடன் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானி ஒருவரும் மூன்று பயணிகளும் இவ்வாறு காயம் அடைந்தனர் எனவும் அவர்களில் எவருக்கும் உயிர் ஆபத்து கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்று இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        