டொராண்டோ நகராட்சி தேர்தல் பிரசாரப் பலகைகள்: அகற்றும் கெடு வியாழக்கிழமையுடன் நிறைவு!
டொராண்டோவில் வீடுகளின் புல்வெளிகளிலோ அல்லது நடைபாதைகளுக்கு அருகிலோ வைக்கப்பட்டிருந்த நகராட்சி தேர்தல் பிரசாரப் பலகைகள் அனைத்தும் வியாழக்கிழமைக்குள் அகற்றி அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை டொராண்டோ மாநகராட்சி வெளியிட்ட நினைவூட்டலில், தனியார் நிலங்களில் வைக்கப்பட்டுள்ள பிரசாரப் பலகைகளை அப்புறப்படுத்தும் பொறுப்பு வேட்பாளர்கள், நில உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களையே சாரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் வைக்கப்பட்ட பலகைகளை அகற்றுவது முழுமையாக வேட்பாளர்களின் பொறுப்பாகும்.

நகராட்சியின் அறிவிப்பின்படி, இந்தச் சின்னங்கள் மற்றும் பலகைகளைச் சேகரித்து அகற்றுவதற்காக அல்லது மறுசுழற்சி செய்வதற்காக நகரின் ஏதேனும் ஒரு "டிராப்-ஆஃப் டிப்போவிற்குகொண்டு செல்லலாம்:
டொராண்டோ மாநகராட்சியின் 7 டிராப்-ஆஃப் டிப்போக்களிலும் நார் சார்ந்தப் பலகைகள் (Fibre-based), பிளாஸ்டிக் ஃபிலிம் பலகைகள் மற்றும் நெளிவுள்ள பிளாஸ்டிக் (Corrugated plastic) பலகைகள் ஏற்றுக்கொள்ளப்படும். மர மற்றும் உலோகக் கம்பிகளையும் நகராட்சி மையங்கள் ஏற்றுக்கொள்ளும்.
நெளிவுள்ள பிளாஸ்டிக் பலகைகளை ஒன்றாகக் கட்டவோ அல்லது வெவ்வேறு பொருட்களைக் கலந்து போடவோ கூடாது. மர/உலோகக் கம்பிகளை தனியாகப் பிரித்து, பிளாஸ்டிக் கவர்களை வெளிப்படையான பைகளில் போட்டு, பலகைகளில் உள்ள 'ஸ்டேப்ளர் பின்'களை (Staples) முழுமையாக அகற்ற வேண்டும்.
ஸ்டேப்ளர் பின்கள் அகற்றப்படாத பலகைகள் குப்பையாகக் கருதப்பட்டு, அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்படும். முறையான முறையில் பிரித்துச் சுத்தப்படுத்தப்பட்ட பலகைகளை ஒப்படைக்க எவ்விதக் கட்டணமும் இல்லை.
எனினும், பிரிக்கப்படாத கலவைக் கழிவுகளுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 189.86 டொலர் கட்டணமும், முதல் 100 கிலோகிராமிற்கு $19 நிலையான கட்டணமும் வசூலிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட கெடுவைத் தாண்டியும் அகற்றப்படாமல் இருக்கும் பிரசாரப் பலகைகள் குறித்து பொதுமக்கள் 311 என்ற எண்ணிற்குத் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்.
சேவை கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது விளம்பரதாரரின் பெயர் மற்றும் பலகை இருக்கும் இடம் ஆகிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். தேர்தல் பலகைகளை அகற்றுவது குறித்த கூடுதல் விவரங்களுக்கு டொராண்டோ மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணைதளத்தைப் பார்வையிடலாம்.