இஸ்ரேலியத் தேர்தல்களில் எப்போதும் ஆச்சரியம்
இஸ்ரேலிய பாராளுமன்றத் தேர்தலின் முதல் மூன்று மணி நேரத்தில் வாக்குப்பதிவு 16.68 சதவீதத்தை எட்டியுள்ளது. இது பல தசாப்தங்களில் பதிவான மிக உயர்ந்த ஆரம்பகட்ட வாக்குப்பதிவு விகிதங்களில் ஒன்றாகும் என மத்திய தேர்தல் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிர்சைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் நிபெல் கலீல் கூறுகையில், இந்த ஆரம்பகட்ட புள்ளிவிவரங்களை தான் நம்பவில்லை என்றும், இஸ்ரேலியத் தேர்தல்களில் நாங்கள் எப்போதும் ஆச்சரியங்களுக்காகக் காத்திருக்கிறோம் என்றும் கூறினார்.

தேர்தல் செயல்முறையைச் சிதைப்பதற்கான முயற்சிகள் நடக்கலாம்
இஸ்ரேலில் வசிக்கும் பலஸ்தீன குடிமக்கள் சிலரால் வாக்களிக்க முடியாமல் போகலாம் என்று குறிப்பிட்ட கலீல், தேர்தல் செயல்முறையைச் சிதைப்பதற்கான முயற்சிகள் நடக்கலாம் என்றும் எச்சரித்தார்.
நெதன்யாகு ஆட்சியில் நீடிப்பதற்காக காடி ஐசென்கோட் அல்லது மன்சூர் அப்பாஸுடன் கைகோர்க்க எல்லாவிதமான சூழல்களும் சாத்தியம் என்றும் சொல்லப்போனால், இதுதான் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தும் சூழல் என்றும் கூறினார்.
புதிய அரசாங்கத்திடமிருந்து பலஸ்தீனர்கள் தங்களுக்குத் தனி நாடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், ஆனால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கட்டுப்பாடுகளை அந்த அரசாங்கம் தளர்த்தக்கூடும் என்றும் கலீல் தெரிவித்தார்.