ரஷ்யாவின் ஆளில்லா விமானத் தாக்குதல் ; 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் உள்ள பூங்கா ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று குழந்தைகள் உட்பட ஆறாக அதிகரித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி, கார்கிவ் மாகாணத்தின் நோவா வோடோலாஹா பகுதியில் அமைந்துள்ள பூங்கா மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் 12 வயதான ஆர்டெம் கோவல் என்ற சிறுவன், கீவ் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்தத் தாக்குதலில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் உக்ரைனில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.