ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒருநாள் சேவைகள் உட்பட அனைத்துப் பொதுச் சேவைகளும் நாளைய தினம் (ஏப்ரல் 17, 2026) இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இந்தத் தற்காலிகச் சேவை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், கணினி அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அன்றைய தினம் சேவைகள் வழங்கப்படமாட்டாது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் தங்களது தேவைகளை அதற்கேற்பத் திட்டமிடுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன் சேவைகள் மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.