ஜெர்மனியில் மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனம் மீது குற்றச்சாட்டு!
ஜெர்மனி நாட்டில் மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று சட்டத்திற்கு எதிராக இயங்குவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
ஜெர்மனியில் மின்சாரம் வழங்குகின்ற சில நிறுவனங்கள் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியள்ளது.
அதாவது ஈயோன் என்று சொல்லப்படுகின்ற மிகப்பெரும் மின்சாரம் வழங்கும் நிறுவனம் ஆனது தனது மின்சாரத்துக்குரிய செலவை 45 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
அதாவது பாவணையாளர் பாதுகாப்பு அமைப்பானது தமது அமைப்பிற்கு 1000 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் இவ்வாறு வந்துள்ளது என தெரிவித்திருக்கின்றது. இது சம்பந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பானது 56 சதவீதமாக உள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
இந்நிலையில் ஜெர்மனியின் அரசாங்கமானது நியாய விலை மின்சாரத்தை அறிமுகப்படுத்திய போதிலும் இந்த நிறுவனமானது இவ்வாறு மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளையில் பல் வேறு அமைப்புக்களும் இவ்வாறு மின்சார கட்டணத்தினுடைய தொகையை அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.