கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயம்
ஒன்ராறியோ மாகாண இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலை 9க்கு தெற்கே உள்ள பின்னர்டி சைட் ரோட்டில் அமைந்துள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார், பொதுமக்களை தற்காலிகமாக உள்ளே தங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, துப்பாக்கிக் காயங்களுடன் மூவர் கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒருவர் தீவிரமான ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடனும், மற்றொருவர் சிறிய காயங்களுடனும் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனால், அறியப்படாத எண்ணிக்கையிலான சந்தேக நபர்கள் இன்னும் தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் குறித்த எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.