அந்தரங்க பாகங்களை காட்டி பொதுமக்களை முகம் சுளிக்க செய்த நபரை தேடும் பொலிஸ்
கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் நபர் ஒருவர் தனது அந்தரங்க பாகங்களை காண்பித்து பொதுமக்களை முகம் சுளிக்கச் செய்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கடந்த வார இறுதி நாட்களில் இவ்வாறு குறித்த நபர் அனைவரையும் முகம் சுளிக்கச் செய்யும் வகையில் தனது அந்தரங்க பாகங்களை காண்பித்து மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் வீதியில் சென்ற போது குறித்த நபர் இவ்வாறு தனது அந்தரங்க பாகங்களை அவர்களுக்க காண்பித்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
பூங்காவில் இருந்த குறித்த தாய் மற்றும் பிள்ளைகளை நோக்கி வந்த சந்தேக நபர், தனது காற்சட்டையை கழற்றி இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு ஆசிய பூர்வீகத்தைக் கொண்ட குறித்த நபர் 20 தொடக்கம் 30 வயதினை கொண்டிருக்கலாம் என பொலிஸார் ஊகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபர் பற்றிய ஏதேனும் தகவல்கள் இருந்தால் என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு யோர்க் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.