உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட முகேஷ் அம்பானி
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி சரிவை சந்தித்துள்ளார்.
புளும்பெர்க் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் லையன்ஸ் இண்டஸ்டிரிஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதற்கு முன் 4வது இடத்தில் இடம்பிடித்த முகேஷ் அம்பானி, தற்போது 11வது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு அவரது ரிலையன்ஸ் பங்குகள் மதிப்பு குறைந்ததே காரணம் என கூறப்படுகின்றது.
மேலும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 5 லட்சத்து 63 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாக புளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசாஸ் முதல் இடத்திலும், கூகுள் இணை நிறுவனர் செர்ஜே பிரின் 9வது இடத்திலும், 10வது இடத்தில் ஆரக்கிள் (ORACLE) நிறுவனத்தின் நிறுவனர் லாரி எலிசனும் இடம்பெற்றுள்ளதாக புளும்பெர்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.