பாகிஸ்தான் தொடர்பில் பல்டி அடித்த அமெரிக்கா!
பாகிஸ்தான் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை பாதுகாக்கும் வல்லமை கொண்டது என்பதில் நம்பிக்கை உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எந்த வித ஒற்றுமையும் இன்றி அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe biden) கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.
ஜோ பைடனின்(Joe biden) பேச்சுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது.
மேலும், அமெரிக்க தூதரரை நேரில் அழைத்து பாகிஸ்தான் தனது அதிருப்தியை தெரிவித்தது. பாகிஸ்தான் 'ஆபத்தான நாடு' கருத்தில் இருந்து அமெரிக்கா தற்போது பல்டி அடித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெள்ளைமாளிகை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேல்(Vedant Patel) இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பாகிஸ்தான் குறித்து ஜோ பைடன்(Joe biden) தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த செய்தித்தொடர்பாளர் படேல், அணு ஆயுதத்தை பாதுகாப்பதில் பாகிஸ்தானின் திறன் மற்றும் உறுதிபாட்டில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
பாதுகாப்பு மற்றும் வளமான பாகிஸ்தான் எப்போதும் அமெரிக்காவுக்கு முக்கியமானதாக நாங்கள் பார்க்கிறோம்.
பாகிஸ்தானுடனான நீண்டகால ஒருங்கிணைப்பை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் மிகவும் வலிமையான உறவை கொண்டுள்ளோம்' என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.